/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடகாவிலிருந்து போதை பொருள் கடத்தல்; ஊட்டியில் விற்பனை செய்த வாலிபர் கைது
/
கர்நாடகாவிலிருந்து போதை பொருள் கடத்தல்; ஊட்டியில் விற்பனை செய்த வாலிபர் கைது
கர்நாடகாவிலிருந்து போதை பொருள் கடத்தல்; ஊட்டியில் விற்பனை செய்த வாலிபர் கைது
கர்நாடகாவிலிருந்து போதை பொருள் கடத்தல்; ஊட்டியில் விற்பனை செய்த வாலிபர் கைது
ADDED : நவ 17, 2024 10:18 PM

ஊட்டி ; ஊட்டியில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த, மைசூரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து, 105 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில், சமீப நாட்களாக போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதனை தடுக்கும் வகையில், சந்தேகப்படும் வகையில் சுற்றி திரியும் நபர்களையும், போதை பொருள் விற்பனை செய்யும் இடங்களிலும் போலீசார் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த முகமது,32, என்பவர் போதை பொருளை, கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையில், எஸ்.ஐ.,க்கள் சுரேஷ், கனகராஜ், நித்தியானந்தன், காவலர் ஜெயக்குமார் ஆகியோர், கோடப்பமந்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த முகமது என்பவரை பிடித்தனர். பின், அவர் வீட்டில் ஆய்வு செய்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 105 கிலோ போதை பொருட்கள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.
விசாரணையில், 'அவர் கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, நீலகிரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வந்தார்,' என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.