/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலநிலை மாற்றத்தால் வெள்ளை பூண்டு... வரத்து அடியோடு சரிவு! ஊட்டியில் கிலோ ரூ. 500 வரை விற்பனை
/
காலநிலை மாற்றத்தால் வெள்ளை பூண்டு... வரத்து அடியோடு சரிவு! ஊட்டியில் கிலோ ரூ. 500 வரை விற்பனை
காலநிலை மாற்றத்தால் வெள்ளை பூண்டு... வரத்து அடியோடு சரிவு! ஊட்டியில் கிலோ ரூ. 500 வரை விற்பனை
காலநிலை மாற்றத்தால் வெள்ளை பூண்டு... வரத்து அடியோடு சரிவு! ஊட்டியில் கிலோ ரூ. 500 வரை விற்பனை
ADDED : ஜூலை 13, 2024 07:54 AM

ஊட்டி, : நீலகிரியில் தொடரும் காலநிலை மாற்றத்தால், வெள்ளை பூண்டு உற்பத்தி வெகுவாக குறைந்து, விலை அதிகரித்து வருவதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நுால்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தரமான வெள்ளை பூண்டு
நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் உடையதாக உள்ளது. இந்த பூண்டுக்கு எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான எம். பாலாடா, கொல்லிமலை ஓர நள்ளி, பி. மணிஹட்டி, கடநாடு, கார பிள்ளு மற்றும் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட பகுதிகளிலும் பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.கடந்தாண்டிலும் பருவ மழை பொய்தது. நடப்பாண்டிலும் கோடை, தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
மழை பொய்த்ததால் குறைந்தளவிலான வெள்ளை பூண்டு பயிரிடப்பட்டது. தற்போது, அறுவடைக்கு தயாரான வெள்ளை பூண்டுகளை விவசாய நிலங்களில் தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பப்பட்டது.
காலநிலை மாற்றத்தால் நடப்பாண்டில் குறைந்தளவில் வெள்ளை பூண்டு உற்பத்தியானதால், கடந்த சில நாட்களாக மிகவும் குறைந்தளவிலான பூண்டு மட்டுமே ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வெள்ளை பூண்டு விற்பனைக்கு வருவதில்லை. அதனால், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டி மார்க்கெட்டுக்கு பூண்டு குறைந்தளவில் விற்பனைக்கு வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தரமான ஊட்டி பூண்டு கிலோ, 500 ரூபாய், பிற மாநில பூண்டு கிலோ, 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோ, 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதே நிலை தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.