/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊராட்சியில் குப்பை கழிவுகளை எரிப்பதால்... சுற்றுச்சூழல் பாதிப்பு!வளம் மீட்பு பூங்கா அமைக்காததால் சிக்கல்
/
ஊராட்சியில் குப்பை கழிவுகளை எரிப்பதால்... சுற்றுச்சூழல் பாதிப்பு!வளம் மீட்பு பூங்கா அமைக்காததால் சிக்கல்
ஊராட்சியில் குப்பை கழிவுகளை எரிப்பதால்... சுற்றுச்சூழல் பாதிப்பு!வளம் மீட்பு பூங்கா அமைக்காததால் சிக்கல்
ஊராட்சியில் குப்பை கழிவுகளை எரிப்பதால்... சுற்றுச்சூழல் பாதிப்பு!வளம் மீட்பு பூங்கா அமைக்காததால் சிக்கல்
ADDED : பிப் 28, 2024 12:33 AM

பந்தலுார்:பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சியில், வளம் மீட்பு பூங்கா அமைக்காததால், குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சியில், 15 வார்டுகள்; 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளது. இந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கொட்ட இட இல்லாத நிலையில், நெலாக்கோட்டை பஜாரை ஒட்டிய, சாலையோரம் கொட்டப்பட்டு வந்தது.
இதனால், வனவிலங்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குப்பைகள் கொட்ட இடம் இல்லாத நிலையில், சேகரிக்கப்படும் குப்பை அந்தந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. முறையாக நிதி ஒதுக்கீடு செய்து, பணி துவக்கப்படாததால் அந்த திட்டம் முடங்கியது.
அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு புறம்போக்கு நிலங்கள், செக்சன்-17க்கு உட்பட்ட, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில், அவற்றை கையகப்படுத்தி, குப்பை கொட்ட இடம் ஒதுக்கினால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதற்கான முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை.
இதனால், தற்போது துாய்மை பணியாளர்கள் வாயிலாக சேகரிக்கப்படும் குப்பைகள், அந்தந்த பகுதியில் கொட்டி எரிக்கப்படுகிறது.
அதில், பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களை எரிப்பதால், அதிலிருந்து எழும் புகை மற்றும் துர்நாற்றத்தால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் சுப்ரமணியன் கூறுகையில், ''நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் வளப்பு; பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற நடவடிக்கையில், மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் களம் இறங்கி உள்ளன.
இதற்கு ஒத்துழைப்பு தராமல், ஊராட்சி நிர்வாகம் ஆங்காங்கே குப்பையை எரிப்பது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும்.
பிளாஸ்டிக் மற்றும் குப்பையை எரிப்பதால், மூச்சு திணறல் உட்பட பல்வேறு நோய்கள் வருகிறது. நெலாக்கோட்டை ஊராட்சிக்கு குப்பை கொட்ட இடத்தை தேர்வு செய்து, கிடங்கு அமைத்து, வளம் மீட்பு பூங்கா உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மக்களுடன் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

