/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போதிய பஸ் இல்லாததால்... திக்... திக்... பயணம்! நாள்தோறும் அவதிக்குள்ளாகும் உள்ளூர் பயணிகள்
/
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போதிய பஸ் இல்லாததால்... திக்... திக்... பயணம்! நாள்தோறும் அவதிக்குள்ளாகும் உள்ளூர் பயணிகள்
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போதிய பஸ் இல்லாததால்... திக்... திக்... பயணம்! நாள்தோறும் அவதிக்குள்ளாகும் உள்ளூர் பயணிகள்
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போதிய பஸ் இல்லாததால்... திக்... திக்... பயணம்! நாள்தோறும் அவதிக்குள்ளாகும் உள்ளூர் பயணிகள்
ADDED : டிச 15, 2025 05:27 AM

குன்னுார்: 'நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால், கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், முழுவதும், 7 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நிலையில் அதற்கேற்ப அரசு பஸ்கள் இயக்கம் போதுமானதாக இல்லை. இதனால், தினமும் மக்களின் அன்றாட பயணம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றது.
குறிப்பாக, குன்னுார்- - ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பஸ் இயக்க வேண்டிய நிலையில், உரிய பஸ்கள் இயக்குவதில்லை. குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு செல்ல காலை, 8:00 மணியில் இருந்து, 10:00 மணி வரை பணிகளுக்கு செல்வோர் சமவெளியில் இருந்து வரும் பஸ்களை அதிகம் நம்பி, கூட்ட நெரிசலில் நின்று கொண்டு பயணம் செய்கின்றனர்.
ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு மாலை, 4:55 மணியில் இருந்து, 6:30 வரை உரிய பஸ்கள். அதிக உள்ளூர் பஸ்கள், பீக் ஹவர்ஸ் நேரங்களான காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்காததால், 'எக்ஸ்பிரஸ்' பெயரில் இயங்கும் பஸ்களில் பயணிகள் கூட்ட நெரிசலில் பயணம் செய்வது நீடிக்கிறது. தேசிய நெடுஞ்சாலையும் முழுமையாக சீரமைக்காமல் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுவதால் விபத்து அச்சத்தில் மக்கள் பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதே போன்ற சூழ்நிலை, கூடலுார், கோத்தகிரி பகுதிகளிலும் தொடர்கிறது.
அரசு உத்தரவு படி, மலை மாவட்டத்தில் குறைந்தபட்சமாக, 7 ரூபாய் வசூலிக்கும் இடத்தில், 11 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே, 74 பஸ்கள் நிறுத்தப்பட்டதை உடனடியாக இயக்க மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை சரி செய்யாமல், பல பஸ்களை வெளியூர்களுக்கு இயக்க முக்கியத்துவம் அளித்து, லோக்கல் பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் உத்தரவு மீறல் லஞ்சமில்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன் கூறுகையில், '' மாவட்டத்தில் தற்போது, 165 லோக்கல் பஸ்கள், 180 வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தஞ்சாவூர், திருச்சி போன்ற இடங்களுக்கு, 5 பஸ்களுக்கும் மேல் இயக்கப்படுகிறது. இங்கு அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும் நிலையில், 2018 முதல், மலை பகுதிகளில், 20 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது.
80 கி.மீ. துாரத்திற்குள், 4 ஸ்டாப்களில் வசூலிக்க வேண்டிய 'எக்ஸ்பிரஸ்' கட்டணம், ஆர்.டி.ஓ., விதிமுறைகள் மீறி, குறைவான துாரத்துக்கும் வசூலிக்கப்படுகிறது. ஐகோர்ட் உத்தரவையும் மீறி வசூலிக்கும், எக்ஸ்பிரஸ் கட்டணம் ரத்து செய்யப்படாமல் போக்குவரத்து கழகம் பயணிகளை ஏமாற்றுகிறது. எனவே, மாவட்ட மக்களின் போக்குவரத்தை மேம்படுத்த குழு அமைத்து, ஆய்வு செய்து மலை மாவட்ட மக்களின் தேவைக்கேற்ப பீக் ஹவர்ஸ் நேரங்களில் கூடுதலான பஸ்களை இயக்க வேண்டும்,''என்றார்.
அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கூறுகையில், '' மாவட்டத்தில், பீக் ஹவர்ஸ் நேரத்தில் பஸ்கள் தற்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டது. மீண்டும் வணிக மேலாளரிடம் தெரிவித்து குறைபாடுகள் உள்ள பகுதிகளில் உரிய தீர்வு காணப்படும்,'' என்றார்.

