/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வன விலங்கு தொல்லையால் உற்பத்தி அறவே இல்லை விவசாயிகள் கவலை:வெளி மாவட்டத்திலிருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை
/
வன விலங்கு தொல்லையால் உற்பத்தி அறவே இல்லை விவசாயிகள் கவலை:வெளி மாவட்டத்திலிருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை
வன விலங்கு தொல்லையால் உற்பத்தி அறவே இல்லை விவசாயிகள் கவலை:வெளி மாவட்டத்திலிருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை
வன விலங்கு தொல்லையால் உற்பத்தி அறவே இல்லை விவசாயிகள் கவலை:வெளி மாவட்டத்திலிருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை
ADDED : பிப் 04, 2024 10:53 PM

ஊட்டி:ஊட்டியில் வனவிலங்கு தொல்லை அதிகரிப்பால் 'காலிபிளவர்' உற்பத்தி மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி, இங்கிலீஸ் காய்கறிகளான உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், புரோக்கோலி, முள்ளங்கி, பீன்ஸ், அவரை, டர்னிப், வெள்ளை முள்ளங்கி, பூண்டு, கிளை கோஸ் அதிகளவில் பயிரிடப்படுகிறது.
உற்பத்தி செய்யப்படும் காய்கறியை விவசாயிகள் ஊட்டி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரம் பிரிக்கப்பட்டு தமிழகம் உட்பட பெங்களூரு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பபடுகிறது. தவிர, உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவைகள் மலை காய்கறி தோட்டத்தில் விலை பேசி நேரடியாக குறிப்பிட்ட இடங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
வனவிலங்கு பிரச்னை
நீலகிரியில் சமீபகாலமாக காலநிலையில் ஏற்பட்ட சீதோஷ்ண நிலைமாற்றத்தால் மலை காய்கறி உற்பத்தியில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வது என்பது சவாலாகி வருகிறது. இதற்கிடையே, காடுகள் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பால் யானை, காட்டெருமை, குரங்கு, கரடி, காட்டு பன்றி ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை அழிப்பதால், பெரும்பாலான விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தை கைவிட்டுள்ளனர். வங்கி கடன் வாங்கி மலை காய்கறி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
காலிபிளவர் உற்பத்தி பாதிப்பு
ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான, பி.மணி ஹட்டி, முட்டிநாடு, காத்தாடி மட்டம், மீக்கேரி, மணலாடா, கல்லக் கொரை ஹாடா உள்ளிட்ட பகுதிகளில் காலிபிளவர் விவசாயம் அதிகளவில மேற்கொள்ளப்பட்டு வந்தது.
குறிப்பாக, காலிபிளவர் விவசாயத்திற்கு அதிக நாட்கள், பராமரிப்பு போன்ற காரணங்களால், இந்த விவசாயம் படிப்படியாக குறைந்தது.
மேலும், வன விலங்குகள் விளை நிலங்களுக்கு படையெடுப்பதால் இத்தொழில் அறவே குறைந்து வருகிறது.
தற்போது, மாவட்டத்தில், 10 சதவீதம் தான் பயிரிடப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் காலி பிளவர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுவதில்லை.
தற்போது ஊட்டியில் விற்கப்படும் காலிபிளவர் அனைத்தும் பெங்களூரு, திருப்பூர், ஒட்டன்சத்திரம், உடுமலை உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மார்க்கெட் விவசாயிகள் சங்க கவுரவ தலைவர் குமார் கூறுகையில்,'' சமீபகாலமாக வன விலங்கு தொல்லையால் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்வதை விவசாயிகள் குறைத்து வருகின்றனர்.
இங்கு அதிகளவில் உற்பத்தி செய்துவந்த காலி பிளவர் உற்பத்தி அறவே குறைந்து, வெளிமாவட்ட காலிபிளவர் தான் ஊட்டிக்கு விற்பனைக்கு வருகிறது,'' என்றார்.

