/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா
/
மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா
ADDED : அக் 04, 2024 10:10 PM
கூடலுார் : முதுமலை, மசினகுடி ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில் தசரா திருவிழா, 12ம் தேதி வரை நடக்கிறது.
முதுமலை, மசினகுடியில் அமைந்துள்ள, ஸ்ரீ மசினி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, தசரா திருவிழா நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான தசரா திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மாயார் கிராமத்திலிருந்து ஸ்ரீ சிக்கம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
9ம் தேதி வரை, ஸ்ரீ மசினி அம்மனின் தங்கைகளாக வணங்கப்படும் ஸ்ரீ சிக்கம்மன், தொட்டம்மன், தண்டு மாரியம்மன் மற்றும் இரத தங்கைகளுக்கு தினமும் சிறப்பு பூஜை நடைபெறும்.
10ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தசரா திருத்தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 11ம் தேதி சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து அன்னதானம் வழங்குதல், முளைப்பாரி எடுத்து வருதல், மாவிளக்கு பூஜைகளும் நடக்கிறது.
12ம் தேதி, சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ சிக்கம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமசினி அம்மன் கோவில் பக்தர்கள் நல சங்கம், கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.