/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புழுதி பறக்கும் மைதானம்: மாணவர்கள் பாதிப்பு
/
புழுதி பறக்கும் மைதானம்: மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 01, 2024 12:06 AM

பந்தலுார்;பந்தலுார் அருகே அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் மண் நிரம்பி உள்ளது.
இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாடும் போது, மாணவர்களின் சீருடை மொத்தமும் மண்ணாக மாறி விடுவதுடன், உடல் முழுவதும் மண் ஒட்டி கொள்கிறது.
தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால் மண் முழுவதும் புழுதிகளாக மாறி உள்ளது. காற்று வீசும் போது பள்ளி வளாகம் முழுவதும் துாசு மண்டலமாக மாறி, வகுப்பறைகள், சத்துணவு சமையல் கூடம் மற்றும் அலுவலக உள்பகுதியிலும், துாசு படிந்து விடுகிறது.பகல் வேளையில் மைதான ஓரப்பகுதியில் அமர்ந்து உணவு உட்கொள்ளும், மாணவர்கள் துாசு மண்டலத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த மைதானத்தை புல் மைதானமாக மாற்றினால், மாணவர்களின் நீண்டகால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

