/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டிக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட கலெக்டர் தகவல்
/
ஊட்டிக்கு இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட கலெக்டர் தகவல்
ADDED : மே 04, 2025 09:34 PM
கோத்தகிரி; கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நடந்து வருவதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக, இ-பாஸ் அனுமதி பெற்று வர வேண்டும். மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட, பிளாஸ்டிக் பொருட்களை சுற்றுலா பயணிகள் எடுத்து வர கூடாது.
அவ்வாறு எடுத்து வந்தாலும், சோதனை சாவடிகளில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகள் வருகையை ஒட்டி, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தோட்டக்கலை துறை சார்பில், கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கூடலுாரில் வாசன திரவிய கண்காட்சி மற்றும் முதல் முறையாக குன்னுார் காட்டேரி பூங்காவில் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.