/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் பணி தீவிரம்; நேற்று மதியத்துக்குள் 6,000 பதிவு 'ஓவர்'
/
நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் பணி தீவிரம்; நேற்று மதியத்துக்குள் 6,000 பதிவு 'ஓவர்'
நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் பணி தீவிரம்; நேற்று மதியத்துக்குள் 6,000 பதிவு 'ஓவர்'
நீலகிரி மாவட்டத்தில் இ--பாஸ் பணி தீவிரம்; நேற்று மதியத்துக்குள் 6,000 பதிவு 'ஓவர்'
ADDED : ஏப் 02, 2025 08:53 AM

கூடலுார்; ஊட்டியில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவின் படி, சுற்றுலா வாகனங்களுக்கு, இ-பாஸ் பதிவு நேற்று துவங்கியது; மதியத்துக்குள், 6,000 பதிவுகள் முடிந்தன.
நீலகிரி மாவட்டம், ஊட்டி, கொடைக்காலுக்கு அதிக சுற்றுலா வாகனங்கள் வருவதை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ--பாஸ் நடைமுறையை பின்பற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. அதில் உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இ--பாஸ் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், ஊட்டி கோடை சீசனின் போது ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகயைில், நேற்று முதல் வார நாட்களில், 6,000 வாகனங்களும், வார இறுதி இரு நாட்களில், 8,000 ஆயிரம் வாகனங்களும் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த நடைமுறை ஜூன், 30 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில், இந்த உத்தரவை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் நேற்று அமல்படுத்தி உள்ளது. அதன்படி, கூடலுாரை ஒட்டிய, தமிழக -கேரளா-- கர்நாடக எல்லைகளில் உள்ள, சோதனை சாவடிகள்; குன்னுார் கல்லார் சோதனை சாவடி; கோத்தகிரி குஞ்சப்பனை சோதனை சாவடிகளில், அதிகாலை முதல் இ-பாஸ் பதிவு துவங்கியது.
மதியத்துக்குள், 6,000 பதிவுகள் முடிந்தன. இதனால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்ய முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தன. அதில், பதிவு செய்து, வராமல் உள்ள வாகன எண்ணிக்கையை பொருத்து பிற வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,'' இன்று (நேற்று) துவங்கிய இ-பாஸ் பதிவு முறையில், மதியத்திற்குள், 6,000 பதிவு முடிந்தது. அதற்கு பின் பதிவு செய்பவர்களின் பெயர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் வரவில்லை என்றால் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்,'' என்றார்.