ADDED : டிச 09, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் பஸ் ஸ்டாண்டில் ஒரு கட்டண கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அதில், 5,10 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இங்கு சட்டமன்ற பேரவை குழுவினர் ஆய்வு செய்த போது, 'கட்டணம் அதிகம் என்பதால், இலவச கழிப்பிட வசதியை இங்கு ஏற்படுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தினர்.
ஆனால். நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், காலை, 8:00 மணிவரை இந்த கட்டண கழிப்பிடமும் பூட்டப்பட்டுள்ளதால், அதிகாலையில் வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

