தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை: விழுந்த மரங்களை அதற்றிய தீயணைப்பு படையினர்

அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை: விழுந்த மரங்களை அதற்றிய தீயணைப்பு படையினர்

அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை: விழுந்த மரங்களை அதற்றிய தீயணைப்பு படையினர்


UPDATED : அக் 08, 2026 07:20 PM

ADDED : அக் 08, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:20 PM ADDED : அக் 08, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் அதிகாலையில் பெய்த மழையால் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.

குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் நேற்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, அப்பர் குன்னுார், சப்ளை டிப்போ பகுதி, காந்திபுரம் ஆகிய இடங்களில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. சில இடங்களில் மின்கம்பங்கள் மீதும் மரங்கள் சாய்ந்தன.

குன்னுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் இறங்கினர். நவீன மர அறுவை இயந்திரங்கள் கொண்டு சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து காலை வெயிலான காலநிலை நிலவியது.

-கோடநாட்டில் அதிகபட்சம்


மழையளவு விவரம் (மி.மீ.,)
கோடநாடு 72
கோத்தகிரி 19
குன்னூர் ரூரல் 30
குன்னூர் 27.5
ஊட்டி - 25.2
கெத்தை 23
பர்லியார் 23
குந்தா 22
உலிக்கல் 17
அவலாஞ்சி 15
கீழ்கோத்தகிரி 15
பாலகொலா - 14
கேத்தி 14
எமரால்டு 12
கிண்ணக்கொரை -10
எடப்பள்ளி 10
கல்லட்டி 6
போர்த்தி மந்து 6
நடுவட்டம் 4
அப்பர்பவானி 4



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us