/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆரம்ப கால பரிசோதனை உடலுக்கு அவசியம்; வெடிமருந்து தொழிற்சாலை தலைமை பொது மேலாளர் அறிவுரை

ADDED : ஜூலை 31, 2025 09:33 PM

குன்னுார்; 'ஒவ்வொருவருக்கும் ஆரம்பகால மருத்துவ பரிசோதனை என்பது, நோய் தடுப்புக்கு சிறந்ததாக உள்ளது,' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
குன்னுார் அருகே அருவங்காட்டில், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனதத்தின் வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்திற்காக, இலவச சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவை, கே.ஜி., மருத்துவமனையின் இருதய, எலும்பியல் மற்றும் கதிரியக்கவியல் நிபுணர்கள் உட்பட டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழிற்சாலை தலைமை பொது மேலாளர் விகாஸ் பூர்வார் முகாமை துவக்கி வைத்து பேசுகையில்,''நவீன வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், உடல் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு நோய் களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மக்களின் அக்கறையற்ற மனப்பான்மையை கருத்தில் கொண்டு, முன்னணி மருத்துவமனைகள் மூலம் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரின் நலனுக்காக இத்தகைய முகாம்கள் நடத்துவது அவசியம். ஆரம்பகால பரிசோதனை, முன்கணிப்பு மற்றும் நோயறிதல் ஆகியவை, குணப்படுத்துவதை விட, மக்களின் நோய் தடுப்புக்கு சிறந்ததாக உள்ளது. இந்த கூற்றை உண்மையாக செயல்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க உதவுகின்றன,'' என்றார். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, நிர்வாக பொது மேலாளர் ராஜிவ், நல அலுவலர் சிவா, வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ராணி உட்பட குழுவினர் செய்தனர்.