/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளியில் புவி தின கருத்தரங்கு அரிய தகவல்கள் பரிமாற்றம்
/
அரசு பள்ளியில் புவி தின கருத்தரங்கு அரிய தகவல்கள் பரிமாற்றம்
அரசு பள்ளியில் புவி தின கருத்தரங்கு அரிய தகவல்கள் பரிமாற்றம்
அரசு பள்ளியில் புவி தின கருத்தரங்கு அரிய தகவல்கள் பரிமாற்றம்
ADDED : ஏப் 28, 2025 11:13 PM
கோத்தகிரி, ;கோத்தகிரி ஈளாடா அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக புவி தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். தொழிலதிபர் போஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், 'மாணவர்கள் கூடுமானவரை தங்களது வீட்டை சுற்றி பசுமை பரப்பினை அதிகரிக்க வேண்டும்,' என்றார்.
கோத்தகிரி லைன்ஸ் கிளப் தலைவர் ராமச்சந்திர ரெட்டி வாழ்த்துரை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
இந்த பிரபஞ்சத்தில் உயிரிகள் வாழ்வதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள ஒரே கோள் பூமி. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள துாரம், 15 கோடி கி.மீ., ஆகும். இந்த துாரம் சற்று குறைந்தாலும், பூமி வெப்ப கோளாகி இருக்கும். கொஞ்சம் அதிகரித்து இருந்தால் பனியால் உறைந்து போயிருக்கும். அந்த வகையில், இயற்கை பூமியை சரியான இடத்தில் வைத்து, அனைத்து உயிர்களும் வாழும் வகையில் வடிவமைத்துள்ளது.
பூமி, தன்னுடைய சமநிலையை பாதுகாத்து கொள்ளும் வகையில், ஐந்து முறை பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, ஆறாவது பேரழிவை நோக்கி செல்வதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். மனித குலத்தின் பேராசையால், பூமியின் வளங்கள் சுரண்டப்பட்டு, புவி வெப்பமாகி இன்று காலநிலை மாற்றம் என்ற பேராபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பூமியை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மனித குலம் மேற்கொண்டால் மட்டுமே சாத்தியம். வரும், 2050ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை, 2 டிகிரி சென்டிகிரேட் அளவை தாண்டி விடும். அந்த நிலையில், தானிய விளைச்சல் குறைந்து விடும்.
மனிதர்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.
பூமியை காக்கும் பணியில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

