தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'பூமி ஆறாவது அழிவை எதிர்கொண்டு வருகிறது' சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தகவல்

 'பூமி ஆறாவது அழிவை எதிர்கொண்டு வருகிறது' சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தகவல்

 'பூமி ஆறாவது அழிவை எதிர்கொண்டு வருகிறது' சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தகவல்


ADDED : ஜன 20, 2026 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சாம்ராஜ் சிவசைலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தேசிய பசுமை படை சார்பில், சுற்றுக் சூ ழல் கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் சுரேஷ் மற்றும் ரகு ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

நமது பூமி தற்போது, ஒரு பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வரைமுறை இன்றி வெளியிடப்பட்ட பசுமை குடில் வாயுக்கள் பூமியை சூடாக்கி, காலநிலை மாற்றம் என்ற பேரழிவின் விளிம்பில் பூமியை நிறுத்தி உள்ளது.

பூமியை சூடாக்கும் கார்பன் - டையாக்சைடு என்ற பசுமைக் குடில் வாயுவை வெளியிடுவதில் இந்தியா, மூன்றாம் இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் உள்ள அமெரிக்க மற்றும் சீனா இந்த விசயத்தில் ஆமை வேகத்தில் செயல்படுகின்றன.

பூமி இதுவரை, ஐந்து முறை பேரழிவை கண்டுள்ளது. ஒவ்வொரு முறையும் பூமி ஆதிக்கம் செலுத்தி, உயிரினத்தை அழித்து தன்னை சமநிலைப்படுத்தி கொண்டுள்ளது. ஆறாவது அழிவில் பூமி அழிக்கப்போவது, இயற்கை வளங்களை அழிக்கும் மனித குலத்தை தான் என்பதை மனிதர்கள் இன்னும் உணரவில்லை.

தற்போது, மனித குலம் பயன்படுத்தும் ஆற்றலின் அளவு, ஏறக்குறைய இரண்டு பூமிகள் இருந்தால்தான் கிடைக்கும். பூமியை காக்க இனி, மனிதர்கள் தேவையில்லை. மனிதர்கள் இல்லாமல் பூமி வாழும். ஆனால், பூமி இல்லாமல் நாம் வாழ முடியாது. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் என்ன செய்வது என்று தெரியாமல், கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில், அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகள் வாயிலாக, பூமியையும், மனித குலத்தையும் காக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, ஊட்டச்சத்து மிக்க கிழங்கு, பழவகைகள் போன்றவை கண்டறியப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.

புதுப்பிக்கத்தக்க சூரிய மற்றும் காற்று ஆற்றல்களை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. பூமியை காப்பது நாடாளும் தலைவர்கள் கையில் இல்லை. மாறாக, இங்கு வாழும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியை யசோதா வரவேற்றார். ஷீலா விக்டோரியா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ராஜ்குமார் பிரேமா, சிவரஞ்சனி கல்பனா, சுகுணா மற்றும் சத்தியா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us