/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு பணம் வழங்குவதில் தாமதமாவதால்.. பொருளாதார நெருக்கடி! கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் அவதி
/
பசுந்தேயிலைக்கு பணம் வழங்குவதில் தாமதமாவதால்.. பொருளாதார நெருக்கடி! கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் அவதி
பசுந்தேயிலைக்கு பணம் வழங்குவதில் தாமதமாவதால்.. பொருளாதார நெருக்கடி! கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் அவதி
பசுந்தேயிலைக்கு பணம் வழங்குவதில் தாமதமாவதால்.. பொருளாதார நெருக்கடி! கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் அவதி
ADDED : ஜூலை 13, 2025 08:29 PM

ஊட்டி; நீலகிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் சிறு விவசாயிகள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கான பணத்தை வழங்குவதில் தாமதம் செய்வதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் 'இன்கோ சர்வ்' (கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டின் கீழ், 'மஞ்சூர், கிண்ணக்கொரை, பிக்கட்டி, எடக்காடு, இத்தலார், நஞ்சநாடு, கைக்காட்டி, மகாலிங்கம், எப்பநாடு, கரும்பாலம், சாலிஸ்பரி,' உள்ளிட்ட, 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
தொழிற்சாலைகளில், 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். தங்களது தேயிலை தோட்டத்தில் அறுவடை செய்யும் இலையை அந்தந்தகூட்டுறவு தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். அதே சமயத்தில், கூட்டுறவு தொழிற்சாலை களில் உறுப்பினர்களாக உள்ளவர்களில், 40 சதவீதம் பேருக்கு, கூட்டு றவு தொழிற்சாலைகளில் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் கூட்டுறவு தொழிற்சாலை உறுப்பினர்கள் பலர், தனியார் தொழிற்சாலைக்கும் பசுந்தேயிலையை வினியோகித்து வருகின்றன.
நெருக்கடியில் விவசாயிகள்
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலைகளில் நாள்தோறும், 25 ஆயிரம் கிலோ முதல், 40 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யும் இலையை அரைக்கும் அதிநவீன மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சமீப காலமாக உறுப்பினர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கு முறையாக பணம் வழங்காமல் மூன்று மாதம் காலமாக பல கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகங்கள் தாமதம் செய்து வருகின்றன.
இதில், பல லட்சம் ரூபாய் உறுப்பினர்களுக்கான தொகை வழங்கப்படாததால் சிறு விவசாயிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
கூட்டுறவு தொழிற்சாலையை தவிர்த்து, தனியார் தேயிலை தொழிற்சாலைகளை அவர்கள் நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகங்கள் எதிர்பார்த்த அளவு இலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தான் காரணம்
சிறு விவசாயிகள் சங்க உறுப்பினர் ராமன் கூறுகையில், ''மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 60 கோடி ரூபாய் செலவில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிதி 'நபார்டு' வங்கி வாயிலாக பெறப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மாத தவணையை முறையாக செலுத்தவில்லை என, கூறப்படுகிறது. ' கடன் தொகையை வங்கியில் முறையாக செலுத்த வேண்டும்,' என, நபார்டு நிர்வாகம் எச்சரித்திருப்பதால், ' டீதுாள்' விற்கப்பட்டு வரும் பணம் உடனுக்குடன் வங்கி யில் பிடித்தம் செய்யப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம் உறுப்பினர்கள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கு முறையாக பணம் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளின் கல்வி கட்டணம் செலுத்த கூட பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். அரசு தலையிட்டு கூட்டுறவு தொழிற்சாலை பிரச்னைகளை களைய தனி கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.