/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்
/
ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்
ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்
ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்
ADDED : ஆக 11, 2025 08:39 PM

ஊட்டி; ஊட்டி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பிரீக்ஸ் பள்ளி சாலையில் உள்ளது. தற்போது, கணேஷ் (காங்.,) எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இந்நிலையில், எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் நேற்று துர்நாற்றம் வீசி உள்ளது. போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, ஊட்டி பி-1 இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கூறுகையில்,'ஆய்வுக்கு பின், முதியவர் இறந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் என்று தெரிகிறது. இவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் யாரும் பார்க்கவில்லை.
நேற்று அலுவலகத்திற்கு வந்தவர்கள் முதியவர் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். அவரின் உடலில் கண் உட்பட சில இடங்களை எலி கடித்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்பு பிற விவரங்கள் தெரியவரும்,' என்றார்.