/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
/
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
ADDED : நவ 24, 2025 05:26 AM
கோத்தகிரி: கோத்தகிரி அருகே காட்டருமை முட்டியதில், முதியவர் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
நீலகிரி வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், பிக்கபதி பிரிவு, அஜ்ஜூர் மாளியாடா பகுதியில் வசிப்பவர், ஸ்ரீரங்கன், 65. கூலி தொழிலாளியான இவர், நேற்று அதிகாலை, தனது வீட்டருகே இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த காட்டெருமை திடீரென வெளியேறி முட்டியுள்ளது. இதில், ஸ்ரீரங்கன் படுகாயம் அடைந்தார். வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, மக்கள் உதவியுடன், காயமடைந்த ஸ்ரீரங் கனை ஊட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். வனத்துறையினர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறியதுடன், நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என, தெரிவித்தனர்.

