ADDED : ஜூலை 25, 2025 08:41 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, தென்னந்தோப்பினுள், தேங்காய் எடுக்க சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஆலத்தூர் காவச்சேரி மருதம்பாடம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி, 79. இவர், நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பினுள் விழுந்து கிடந்த தேங்காய் எடுக்க சென்றனர்.
அப்போது, அங்குள்ள தற்காலிக ஷெட்டினுள் மின் இணைப்பு ஒயர் அறுந்து கிடந்தது தெரியாமல், லட்சுமி மிதித்து விட்டார். இதனால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தோப்புக்குள் சென்ற மற்றொரு பெண், இதை கண்டு ஊர் மக்களிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஆலத்தூர் போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலத்தூர் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.