ADDED : ஏப் 15, 2026 04:18 PM

ஊட்டி: ஊட்டி மார்க்கெட் வியாபாரிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணையம், 100 சதவீதம் ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ஊட்டி மார்க்கெட் பகுதியில், ஆர். டி.ஓ., டினு அரவிந்த் பேசுகையில், 'தகுதி வாய்ந்த வாக்காளர்கள் அனைவரும், வரும், 23ம் தேதி தவறாமல் ஓட்டு அளித்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஓட்டு அளிக்க, மாவட்ட நிர்வாகம் சாவடிகளில், தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்களை சாவடிகளுக்கு அளித்து வந்து ஓட்டு போட வைப்பது அவசியம்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
