ADDED : ஏப் 03, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பந்தலுார் பகுதியில், தேர்தல் பார்வையாளர் ஷரீஸ், செலவின பார்வையாளர் வைபவ் மாதவ்ராவ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பந்தலுார் தாசில்தார் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணம் வயல் ஆகிய ஓட்டு சாவடி மையங்கள், சோலாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகள், நெலாக்கோட்டை போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் உடன் இருந்தனர்.
-
