/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் சிறப்பு கிராம சபையில் -நிர்வாகிகள் தேர்வு
/
பழங்குடியினர் சிறப்பு கிராம சபையில் -நிர்வாகிகள் தேர்வு
பழங்குடியினர் சிறப்பு கிராம சபையில் -நிர்வாகிகள் தேர்வு
பழங்குடியினர் சிறப்பு கிராம சபையில் -நிர்வாகிகள் தேர்வு
ADDED : மார் 21, 2025 02:52 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே, அம்பலமூலா பகுதியில் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் வன உரிமை சட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
அதில், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமை வகித்து பேசியதாவது:
மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்கள், வனங்களையும், வன வளங்களையும் காப்பாற்றுவதில் முன்னோடிகள். வனங்களை சார்ந்து வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக, வன உரிமை சட்டம் இயற்றப்பட்டது. அதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், தங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து, அரசு நிர்வாகத்திற்கு தெரிவிக்க ஏதுவாகவும், பழங்குடியின மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்த கிராம சபை நடத்தப்படுகிறது. எனவே, பழங்குடியின சமுதாயத்தில் படித்த இளைய சமுதாயத்தினர், தங்கள் சமுதாயத்தை மேம்படுத்த முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, கிராம சபை கூட்டத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தலைவராக ஸ்ரீஜா, செயலாளராக மாறன், வன உரிமை சட்ட பிரதிநிதிகளாக மாதன், விஷ்ணு, ராதிகா உள்ளிட்ட, 15 பேர் கொண்ட நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது.
'இந்த குழுவின் மூலம், பழங்குடியினர் தங்கள் தேவைகள் குறித்து ஊராட்சிக்கு தெரிவித்தால், அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, உரிய தீர்வு காணப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், 15 பழங்குடியின கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றத்துடன், தங்கள் கிராமங்களில் உள்ள குறைகள் குறித்தும் பேசினர். மாதன் நன்றி கூறினார்.