ADDED : டிச 31, 2025 08:01 AM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் பஜாரின் மையப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் மீது நேற்று முன்தினம் இரவு இந்த வழியாக வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அதில், மின்கம்பம் வளைந்தது. பெரிய அளவிலான விபத்து ஏதும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதியில் மின்வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து, லாரி உரிமையாளர் சார்பில் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
