/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேவர்சோலையில் மின் கசிவு; துணிக்கடை, பேக்கரியில் தீ
/
தேவர்சோலையில் மின் கசிவு; துணிக்கடை, பேக்கரியில் தீ
தேவர்சோலையில் மின் கசிவு; துணிக்கடை, பேக்கரியில் தீ
தேவர்சோலையில் மின் கசிவு; துணிக்கடை, பேக்கரியில் தீ
ADDED : டிச 01, 2024 10:46 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை பகுதியில் ஏற்பட்ட மின் கசிவால் துணிக்கடை, பேக்கரியில் ஏற்பட்ட தீயில், பொருள்கள் எரிந்து சேதமாகின.
கூடலுார் தேவர்சோலையில் உள்ள வணிக வளாகத்தில் சிவக்குமார் என்பவர் துணிக்கடையும்; ஹாரிஷ் என்பவர் கூல்பார் மற்றும் பேக்கரி நடத்தி வருகின்றனர். அங்கு ரஹ்மத்துல்லா என்பவருக்கு சொந்தமான கடை காலியாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் துணிக்கடையில் தீ ஏற்பட்டு மூன்று கடைகளில் பரவியது. தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையில், 10 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயை அணைக்க வசதியாக கூடலுார் நகராட்சியிலிருந்து இரண்டு லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஊட்டியில் இருந்து மேலும் ஒரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள், 4 மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனால், துணிக்கடை மற்றும் பேக்கரியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
தீயணைப்பு துறை அலுவலர் மார்டின் கூறுகையில், 'துணிக்கடையில், ஏற்பட்ட மின் கசிவால், தீ ஏற்பட்டுள்ளது.
மின் துறைக்கு தகவல் தெரிவித்து அப்பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. காலை, 7:00 மணிக்கு தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இதில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என்றார்.