/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தரை தளத்தில் மின் வயர்கள் -பாதிப்புகள் ஏற்படும் அபாயம்
/
தரை தளத்தில் மின் வயர்கள் -பாதிப்புகள் ஏற்படும் அபாயம்
தரை தளத்தில் மின் வயர்கள் -பாதிப்புகள் ஏற்படும் அபாயம்
தரை தளத்தில் மின் வயர்கள் -பாதிப்புகள் ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 31, 2025 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், உயர்கோபுர தெருவிளக்கு வயர்கள், தரையில் விழுந்து கிடப்பதால் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பந்தலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் பகுதியில், நெல்லியாளம் நகராட்சி உயர்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கிற்கு மின் சப்ளை செய்யப்படும் மின் வயர்கள், தரைதளத்தில் திறந்த நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த பகுதிக்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் குழந்தைகள், கால்நடைகள் வயர்களை தொட்டால் 'ஷாக்' அடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் பாதுகாப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும்.