/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கம்பியாளர் தகுதி தேர்வு 27, 28ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு
/
மின் கம்பியாளர் தகுதி தேர்வு 27, 28ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு
மின் கம்பியாளர் தகுதி தேர்வு 27, 28ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு
மின் கம்பியாளர் தகுதி தேர்வு 27, 28ம் தேதிகளுக்கு ஒத்திவைப்பு
ADDED : டிச 23, 2025 07:07 AM
ஊட்டி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், டிச., 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற இருந்த, மின் கம்பியாளர் உதவியாளர் தகுதிக்கான தேர்வு, டிச., 27 மற்றும் 28ம் தேதி களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு:
குன்னுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு, தேர்வு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் விண்ணப்பித்த தேவர்களுக்கு, தேர்வு மையமாக, திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அறிவிக்கப்பட்டுள்ளதால், வரும், 27, 28ம் தேதிகளில் நடைபெறும் தேர்வுகளில் தவறாமல் கலந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டினை (ஹால் டிக்கெட்) 26ம் தேதிக்குள் குன்னுார் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு முதல்வர், 0423-- 2231759, 94990 55707, 82485 13574 பெண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.