/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூட்டை உடைத்து பணம் திருட்டு: மின்வாரிய ஊழியர் கைது
/
பூட்டை உடைத்து பணம் திருட்டு: மின்வாரிய ஊழியர் கைது
பூட்டை உடைத்து பணம் திருட்டு: மின்வாரிய ஊழியர் கைது
பூட்டை உடைத்து பணம் திருட்டு: மின்வாரிய ஊழியர் கைது
ADDED : மார் 05, 2024 09:05 PM
கோத்தகிரி:கோத்தகிரியில் பணம் மற்றும் நகை திருடிய, மின் வாரிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி அரவேனு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அர்ஜூன், தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்றுள்ளார்.
திரும்பிவந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்ட நிலையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 2 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போயுள்ளது.
கோத்தகிரி போலீசில் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ராமஜெயம், 52, குறிப்பிட்ட நேரத்தில், அர்ஜூன் வீட்டுக்கு சென்று வந்தது தெரிய வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
பணம் மற்றும் நகையை மீட்ட போலீசார், ராமஜெயத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

