தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


UPDATED : அக் 15, 2026 06:18 PM

ADDED : அக் 15, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 06:18 PM ADDED : அக் 15, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரியில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கேங் மேன்கள் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலானோர் சமவெளி பகுதியை சேர்ந்தவர்கள். குடும்ப சூழ்நிலை கருதி, சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கோரி விண்ணப்பித்தனர். ஜூன், 18ல் அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, மாறுதல் உத்தரவுக்கு, நான்கு மாதங்களாக கடந்தும் ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘விடுவிப்பு உத்தரவு ஆணை வழங்க வேண்டும்,’ என, மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற உயர் அதிகாரிகள், ‘மாதந்தோறும் தலா, 5 பேருக்கு பணி விடிவிப்பு ஆணை வழங்கப்படும் ,’என, உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us