/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குந்தா பகுதியில் மின்மயானம் அவசியம்; நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
/
குந்தா பகுதியில் மின்மயானம் அவசியம்; நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
குந்தா பகுதியில் மின்மயானம் அவசியம்; நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
குந்தா பகுதியில் மின்மயானம் அவசியம்; நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : அக் 07, 2025 09:02 PM
மஞ்சூர்; மஞ்சூர் குந்தை சீமை படுகர் நல சங்கத்தின் செயற்குழு கூட்டம் மஞ்சூரில் நடந்தது.
கூட்டத்திற்கு, நஞ்சுண்டராஜ் தலைமை வகித்தார். நல சங்க நிர்வாகிகள் அர்ஜூணன், வாசுதேவன், வசந்தராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 'மாவட்டத்தின் பூர்வ குடிகளாக உள்ள படுகரின மக்களை இனியும் காலம் தாழ்த்தாமல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தேயிலைக்கு குறைந்தபட்சம் கிலோவிற்கு, 40 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மஞ்சூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமித்து, மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்கள் நலன் கருதி குந்தா பகுதியில் மின்மயானம் ஏற்படுத்த வேண்டும்; விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நத்தம் நிலவரி திட்டத்தின் வாயிலாக பதிவு செய்த குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நலசங்க நிர்வாகிகள் ராஜகோபால், சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.