/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி இருவர் காயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
/
யானை தாக்கி இருவர் காயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
யானை தாக்கி இருவர் காயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
யானை தாக்கி இருவர் காயம்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ADDED : பிப் 07, 2025 08:26 PM

பந்தலுார்; பந்தலுாரில் யானை தாக்கி காயமடைந்த இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பந்தலுார் இன்கோ நகர் பகுதியை சேர்ந்த, கணேசன், 65, காந்திமதி,60, ஆகியோர் நேற்று காலை வனத்தை ஒட்டிய தோட்டத்தில் விறகு சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது,புதரில் இருந்த யானை இவர்களை தாக்கியது.
தகவல் அறிந்த பந்தலுார்வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வனச்சரகர் சஞ்சீவிமற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அங்கு காயங்களுடன் நடந்து வந்த காந்திமதி, புதருக்குள் கிடந்த கணேசன் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, இருவரையும் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில வாரங்களில் யானை தாக்கியதில், இதுவரை, 8- பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து, தேவாலா டி.எஸ்.பி., சரவணன், தாசில்தார் சிராஜுநிஷா, வனச்சரகர் சஞ்சீவி, அய்யனார் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பகுதியில் வனக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.