தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி

யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி

யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதி உதவி


ADDED : பிப் 19, 2025 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 09:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்; பந்தலுார் 'இன்கோ' நகரை சேர்ந்தவர் கணேசன்,60. இவர் கடந்த, 6-ம் தேதி காலை, 8:00 மணிக்கு, வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தை ஒட்டிய, புதர் பகுதியில் விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது, அங்கு நின்றிருந்த யானை, அவரை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் வருவாய் துறை ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் மீட்டு பந்தலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக அவரை, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனத்துறை உதவி வன பாதுகாவலர் அருள்மொழி வர்மன், வனச்சரகர்கள் சஞ்சீவி, அய்யனார், வீரமணி மற்றும் வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ., க்கள் மாரிமுத்து, சண்முகம் உள்ளிட்ட வனக்குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, இறந்த கணேசன் குடும்பத்தாரிடம், 40,900 ரூபாய் பணம்; 5- லட்சம் ரூபாய் காசோலை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us