/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வழிமறித்த யானை பஸ் பயணிகள் அச்சம்..
/
வழிமறித்த யானை பஸ் பயணிகள் அச்சம்..
ADDED : பிப் 20, 2024 04:54 AM

பெ.நா.பாளையம்: ஆனைகட்டி அருகே மலைப்பாதையில் பஸ்சை வழிமறித்த யானையால், பயணிகள் அச்சமடைந்தனர்.
கோவை வடக்கு சின்னதடாகம், ஆனைகட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில், யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர். வேட்டை தடுப்பு காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனாலும், யானைகளின் வரவை முழுமையாக தடுக்க முடியவில்லை.
நேற்று முன்தினம், கோவையிலிருந்து ஆனைகட்டி நோக்கி அரசு பஸ் சென்ற நிலையில், ஆலமரமேடு அருகே, சாலையில் நின்றிருந்த யானை, பஸ்சை வழிமறித்தது; பயணிகள் அச்சமடைந்தனர்.
யானை பஸ்சை நோக்கி வந்ததால், ஓட்டுநர் பஸ்சை பின்னோக்கி இயக்கினார். சிறிது நேரம் கழித்து, யானை வனத்துக்குள் சென்றது.

