/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலை நேரத்தில் 'வாக்கிங்' வந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
/
காலை நேரத்தில் 'வாக்கிங்' வந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
காலை நேரத்தில் 'வாக்கிங்' வந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
காலை நேரத்தில் 'வாக்கிங்' வந்த யானை: ஓட்டம் பிடித்த மக்கள்
ADDED : மே 11, 2025 11:43 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பஜார் பகுதியில் நேற்று காலை, ஒற்றை யானை நடந்து வந்த போது,'வாக்கிங்' சென்றவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில், சமீப காலமாக யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஆண் யானை ஒன்று, பஜார் மற்றும் குடியிருப்புகளை ஒட்டிய சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக, வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்த இந்த யானை நேற்று காலை, 6:30 மணிக்கு போலீஸ் நிலைய வளாகம் வழியாக, சாலையில் நடந்து சென்றது. இதனை சிறிதும் எதிர்பார்க்காத 'வாக்கிங்' சென்ற பொதுமக்கள், ஓட்டம் பிடித்தனர்.
மக்கள் கூறுகையில்,' இந்த யானை இதுவரை யாரையும் தாக்கியதில்லை. சில நாட்களுக்கு பின்பு மீண்டும் சாலையில் வலம் வருகிறது. அசம்பாவிதம் நடக்கும் முன்பு, இதனை வேறு அடர்ந்து வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்,' என்றனர்.