ADDED : மார் 29, 2026 03:29 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை பகுதிகளில் மீண்டும் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் மேட்டுப்பாளையம் சாலையோரம் வனப்பகுதிகளில் குட்டியுடன், 11 யானைகள் முகாமிட்டுள்ளன. குரும்பாடி பகுதியில் சாலையை கடந்த யானைகள், ரயில் பாதை, வடுக தோட்டம் பகுதிகளில் முகாமிட்டன. வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த யானைகள் சாலையை கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
