/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: 'ட்ரோன்' உதவியுடன் கண்காணிப்பு தீவிரம்
/
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: 'ட்ரோன்' உதவியுடன் கண்காணிப்பு தீவிரம்
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: 'ட்ரோன்' உதவியுடன் கண்காணிப்பு தீவிரம்
குடியிருப்புகளை ஒட்டி யானைகள் முகாம்: 'ட்ரோன்' உதவியுடன் கண்காணிப்பு தீவிரம்
ADDED : டிச 19, 2025 05:21 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரங்கோடு டான் டீ பகுதியில், முகாமிட்டுள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட புஞ்சை கொல்லி, சாமியார் மலை, காவயல், ஆணைப்பள்ளம், டான் டீ குடியிருப்பு பகுதிகள், சின்கோனா பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் கிராம குடியிருப்புகளை ஒட்டி, வனமாக மாற்றிய டான்டீ தேயிலை தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 32 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன.
யானையை விட, தேயிலை செடிகளின் உயரம் அதிகமாக உள்ளதால், யானைகள் இருக்கும் இடம் தெரியாமல், வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய, பகுதியில் முகாமிடும் யானை கூட்டம், இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில், பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவிலும் வனக்குழுவினர், முகாமிட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர். இரவு நேரங்களில் தீ மூட்டி யானைகள் வெளியே வராமல் தடுக்கின்றனர்.
அத்துடன் பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டங்களை, ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து, தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்வதுடன், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பணியில் வனச்சரகர் மேகலா(பொ) மேற்பார்வையில், வனவர்கள் முத்தமிழ், ஆனந்த் ஆகியோர் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

