/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊருக்குள் வரும் யானை: --ரேடியோ காலர் பொருத்தப்படுமா?
/
ஊருக்குள் வரும் யானை: --ரேடியோ காலர் பொருத்தப்படுமா?
ஊருக்குள் வரும் யானை: --ரேடியோ காலர் பொருத்தப்படுமா?
ஊருக்குள் வரும் யானை: --ரேடியோ காலர் பொருத்தப்படுமா?
ADDED : மே 17, 2025 06:11 AM

பந்தலுார்: 'பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் உலா வரும், ஆண் யானைக்கு 'ரேடியோ' காலர் விரைவில் பொருத்த வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நீலகிரி மாவட்ட எல்லை பகுதியாக பந்தலுார் நெலாக்கோட்டை பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த பல ஆண்டுகளாக,'பந்தலுார் டஸ்கர்-12' என்று பதிவு செய்யப்பட்டு அழைக்கப்படும் ஆண் யானை உலா வருவதை வழக்கமாக கொண்டு உள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் இந்த யானை, இதுவரை, 6 வாகனங்களை தாக்கிய சேதப்படுத்தி உள்ளது.
யானையால் அச்சமடைந்துள்ள உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், 'இந்த யாலையை கும்கி யானைகள் உதவியுடன், பிடித்து அடர் வனத்திற்குள் விட வேண்டும்,' என, வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 'விரைவில் 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, வனப்பகுதியில் இருந்து இந்த யானை வெளியேறும் போது, பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருவதால், மக்களிடையே அச்சம் அதிகரித்து வருகிறது.
இரு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், மற்றும் வாக்கிங் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக யாைனயிடமிருந்து தப்பினர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், ' நாள்தோறும் இரவில் சாலையில் உலா வரும் யானைக்கு, உடனடியாக ரேடியோ காலர் பொருத்தி கண்காணித்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்,' என்றனர்.