/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரில் ஸ்கூட்டியை துவம்சம் செய்த யானை
/
பந்தலுாரில் ஸ்கூட்டியை துவம்சம் செய்த யானை
ADDED : ஜூன் 09, 2025 09:36 PM

பந்தலூர்; பந்தலுார் சாலையில் ஒற்றை யானை ஸ்கூட்டியை துவம்சம் செய்து துாக்கி போட்ட சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன், கூடலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். நேற்று காலை 6:30 மணிக்கு நாடுகாணி வழியாக கேரளாவிற்கு ஸ்கூட்டியில் திரும்பி சென்று கொண்டிருந்தார். யானை ஒன்று சாலையில் நடந்து வந்துள்ளது.
சர்புதீனை யானை துரத்திய நிலையில், ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். ஸ்கூட்டியை யானை துவம்சம் செய்து துாக்கி போட்டது. யானை சிறிது நேரம் சாலையில் உலாவிய நிலையில் வனத்திற்குள் சென்றது. இச் சம்பவத்தால் சாலையில் பயணிக்க பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.