/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆட்டோவை சேதப்படுத்திய யானை நெலாக்கோட்டை அருகே பரபரப்பு
/
ஆட்டோவை சேதப்படுத்திய யானை நெலாக்கோட்டை அருகே பரபரப்பு
ஆட்டோவை சேதப்படுத்திய யானை நெலாக்கோட்டை அருகே பரபரப்பு
ஆட்டோவை சேதப்படுத்திய யானை நெலாக்கோட்டை அருகே பரபரப்பு
ADDED : மே 21, 2025 11:01 PM

பந்தலுார், ; பந்தலுார், நெலாக்கோட்டை அருகே ஆட்டோவை யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலுார் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் யானைகள் குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிகள், சாலை ஓரங்களில் முகாமிட துவங்கி உள்ளன.
இந்நிலையில், பந்தலுார் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதிக்கு நேற்று காலை, 8:00 மணிக்கு வந்த ஆண் யானை, குடியிருப்புகள் மற்றும் கடைவீதிகளுக்கு மத்தியில் சாலையில் உலா வந்தது. யானையை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பக எல்லை பகுதிக்குள் துரத்தினர்.
அப்போது, அங்கு குடியிருப்பு முன்பாக நிறுத்தி இருந்த ரவிக்குமார் என்பவரின் ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தி சென்றது.-
வனத்துறையினர் கூறுகையில்,'இந்த யானை கோழிக்கோடு சாலையில் ஏலியாஸ் கடை பகுதியில் வனத்தை ஒட்டிய புதருக்குள் யானைகள் முகாமிட்டு உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்,' என்றனர்.