/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகளுக்குள் மோதல் காயமடைந்த யானை பலி
/
யானைகளுக்குள் மோதல் காயமடைந்த யானை பலி
ADDED : மே 24, 2025 06:21 AM
பாலக்காடு : பாலக்காடு அருகே, உடலில் காயங்களுடன் உலா வந்த காட்டு யானை உயிரிழந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வனஎல்லையில் வளையார் உள்ளது. இங்குள்ள நடுப்பதி வனத்தில் கடந்த ஒரு மாதமாக, உடலில் காயங்களுடன் காட்டு யானை சுற்றி வந்தது.
வனத்துறையில், யானை நடமாட்டத்தை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், காட்டு யானைகளுக்குள் நடந்த மோதலில், நேற்று முன்தினம் மாலை அந்த யானை இறந்தது.
வாளையார் வனச்சரக வன அதிகாரி முகமதலி ஜின்னா கூறியதாவது:
25 வயது மதிக்கத்தக்க காட்டு யானை காலில் காயங்களுடன் இப்பகுதியில் சுற்றி வந்தது. அந்த யானையை ஒரு மாதமாக கண்காணித்து வந்தோம். பரிசோதனையில் மற்ற யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்தது.
அந்த யானைக்கு வனத்துறையின் கால்நடை மருத்துவர் டேவிட்ஆபிரகாம் தலைமையிலான மருத்துவ குழுவினர், தீவிர சிகிச்சை அளித்தனர். குணமடைந்த யானையை அடர்ந்த வனத்தினுள் அனுப்பினர்.
ஆனால், மீண்டும் காட்டு யானைகள் தாக்கியதில் இந்த யானை உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின் யானையின் உடலை, நடுப்பதி வனத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.