/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் நகருக்கு வந்த யானை குடியிருப்பின் கேட் உடைத்து சேதம்; வாழை மரங்களை வெட்ட வனத்துறை அறிவுரை

ADDED : மார் 21, 2025 09:59 PM
குன்னுார்; குன்னுார் நகர் பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை, வீட்டின் கேட்டை உடைத்து, வாழை மரங்களை உட்கொண்டு மலர் தொட்டிகளை சேதம் செய்தது.
குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர அடர்ந்த இயற்கை வளம் சூழ்ந்த இடங்களில் சமீபகாலமாக மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவதால், யானையின் வழித்தடம் மற்றும் வாழ்விட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீரை தேடி, யானைகள் குன்னுார் நகர் பகுதிக்கு வர துவங்கியுள்ளன.
இங்கு முகாமிட்டுள்ள, 7 காட்டு யானைகளில் ஒரு யானை மட்டும் தனியாக பிரிந்து, டான் டீ குடியிருப்பு, காட்டேரி, பால்கார லைன், ரயில் பாதைகளில் கடந்த, 3 நாட்களாக முகாமிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காட்டேரி பேபி என்பவரின் வீட்டின் முன்புற 'கேட்' மற்றும் பூந்தொட்டிகளை உடைத்து, அங்கிருந்த வாழை மரங்களை உட்கொண்டது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனச்சரகர் ரவீந்திரநாத் உத்தரவின் பேரில், வனவர்கள் ராஜ்குமார், திலீப் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர், நீண்ட நேரம் போராடி அங்கிருந்து விரட்டினர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இந்த பகுதிகளில் வாழை மரங்கள் அதிகளவில் உள்ளதால், யானை இங்கிருந்து இடம் பெயராமல் உள்ளது. குடியிருப்புகளில் தற்காலிகமாக, வாழை மரங்களை வெட்டி அகற்றினால் இரவு நேரங்களில் யானை வருவதை தடுக்கலாம். இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றனர்.