/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் நடமாட்டம்; விவசாய பயிர்கள் சேதம்
/
யானைகள் நடமாட்டம்; விவசாய பயிர்கள் சேதம்
ADDED : டிச 10, 2024 11:27 PM
கோத்தகிரி; கோத்தகிரி ஈளாடா பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக, வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில், குஞ்சப்பனை, மாமரம் மற்றும் தட்டப்பள்ளம் பகுதியில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.
இதர பகுதிகளில், யானைகளின் நடமாட்டம் இதுவரை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, கோத்தகிரி -கோடநாடு சாலையில் அமைந்துள்ள ஈளாடா மற்றும் கதகுதொரை பகுதியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது.
நேற்று முன்தினம் பகல், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, அங்குள்ள கோவில் மற்றும் பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதனால், அச்சமடைந்த மக்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு, பகுதியில் இருந்து யானையை விரட்டினர். எனினும், தோட்ட பயிர்களை யானை சேதப்படுத்தியது. வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.