/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டத்தில் பலாகாயை பறித்து உட்கொண்ட யானை; அச்சத்தில் கூடலுார் விவசாயிகள்
/
தோட்டத்தில் பலாகாயை பறித்து உட்கொண்ட யானை; அச்சத்தில் கூடலுார் விவசாயிகள்
தோட்டத்தில் பலாகாயை பறித்து உட்கொண்ட யானை; அச்சத்தில் கூடலுார் விவசாயிகள்
தோட்டத்தில் பலாகாயை பறித்து உட்கொண்ட யானை; அச்சத்தில் கூடலுார் விவசாயிகள்
ADDED : ஜூலை 01, 2025 09:46 PM

கூடலுார்; கூடலுார் மாக்கமூலா அருகே, விவசாய தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை, மரத்திலிருந்து பலா காயை பறித்து உட்கொண்டு சென்ற காட்சியை பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்.
கூடலுார் தொரப்பள்ளி, குணில், மாக்கமூலா, அள்ளூர்வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவில் காட்டு யானைகள் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இவைகள், இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் வனத்தில் இருந்து வெளியேறி, விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதிகாலை மீண்டும் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று முகாமிடுவதை வழக்கமாக கொண்டுள்ள. வன ஊழியர்கள், யானைகளை கண்காணித்து விரட்டி வருகின்றனர். எனினும், பலா பழம் சீசன் என்பதால், அவைகள் ஊருக்குள் நுழைவதை முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை மாக்கமூலா அருகே, தனியார் எஸ்டேட் சாலையில் நடந்து வந்த காட்டு யானை, மரத்தில் இருந்த பலா காயை பறித்து, அதனை காலில் மிதித்து துண்டாக்கி உட்கொண்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கூறுகையில்,'இரவு நேரங்களில் வந்து சென்ற காட்டு யானை, தற்போது பகலில் விவசாய தோட்டத்தில் முகாமிடுவது, அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. யானைகளால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன், வனத்துறையினர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.