/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானையிடம் உயிர் தப்பியவர் கால் முறிவு
/
யானையிடம் உயிர் தப்பியவர் கால் முறிவு
ADDED : நவ 18, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே, பாவலி பகுதியை சேர்ந்தவர் தேவராஜன்,32. இவர் இந்த பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க தனது ஸ்கூட்டியில் வந்த போது, சாலையில் நின்றிருந்த யானை இவரை துரத்தி உள்ளது. இதனை பார்த்த தேவராஜன் ஸ்கூட்டியை கீழே போட்டுவிட்டு ஓடி உள்ளார்.
ஸ்கூட்டியை உடைத்து சேதப்படுத்தியது. மேலும், யானையிடமிருந்து உயிர் தப்பி ஓடிய தேவராஜனின் கால் முறிந்தது. அருகில் இருந்தவர்கள் யானையை துரத்தி தேவராஜனை மீட்டு, மானந்தவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

