/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுார் மலைபாதையில் முகாமிட்ட யானைகள்; வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க அறிவுரை

UPDATED : ஜூன் 30, 2025 05:29 AM
ADDED : ஜூன் 29, 2025 10:55 PM
குன்னுார்; 'குன்னுார் மலைப்பாதை பர்லியாரில், முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் வாகன ஓட்டுனர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என, வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குன்னுார்-- மேட்டுப்பாளையம் மலைப்பாதையோர வனப்பகுதிகளில், பலா பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனால், இங்கு குட்டியுடன் முகாமிட்டுள்ள, 4 காட்டு யானைகள், பலாப்பழங்களை ருசித்து வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களாக, பர்லியார் 'ரிவர்சைட்' தோட்ட பகுதியில் முகமிட்டுள்ள இந்த யானைகள் அவ்வப்போது சாலைக்கு வந்து செல்கின்றன.
வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து விரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் சாலையில் நீண்ட நேரம் நின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த பகுதியில் உள்ள மாமரங்களில் பழங்களை ருசித்தன. மீண்டும் சாலைக்கு வரும் என்பதால் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'யானைகள் நடமாட்டம் உள்ளதால் மலைப்பகுதியில் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் மிதவேகத்தில் இயக்க வேண்டும்.
ஆங்காங்கே நிறுத்தி செல்பி புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.