/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை பாதையில் குட்டியுடன் முகாமிட்ட யானைகள்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ADDED : ஜன 02, 2025 09:55 PM

குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர மலை பகுதிகளில் குட்டியுடன், 7 காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு மரப்பாலம் அருகே, ஒரே இடத்தில் நின்ற யானைகள் வனத்துறையினரை விரட்ட முயற்சி செய்ததால், மிகவும் சிரமப்பட்டனர்; நள்ளிரவில் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.
காலை நேரங்களில், சாலையோர வனப்பகுதியில், இவை கோரை புற்கள் மற்றும் செடிகளை உட்கொண்டு வருகின்றன. இந்த யானைகள் மீண்டும் சாலைக்கு வரும் என்பதால் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இரவு நேரங்களில் பனியின் தாக்கம் மற்றும் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், இரவு நேரத்தில் யானைகள், சாலையில் வந்து நிற்கின்றன. வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்வதுடன், செல்பி, புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் வனப்பகுதி வழியாக செல்ல கூடாது,' என்றனர்.