ADDED : ஆக 18, 2026 02:10 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி தேயிலை தோட்டம் மற்றும் சாலையை ஒட்டிய புல்வெளியில் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது.
பந்தலுார் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி தொழிலாளர்கள் குடியிருப்புகள், சப்பந்தோடு கிராமப்பகுதி, தமிழக –கேரளா இணைப்பு சாலை அமைந்துள்ளது. இதனை ஒட்டிய புல்வெளியில் யானை கூட்டம் மேய்ச்சலில் ஈடுபட்டது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இந்த வழியாக வந்து சென்ற சுற்றுலா பயணிகளும், இவற்றை பார்த்து ‘போட்டோ’ எடுத்து செல்கின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,‘ இப்பகுதியில் புல்வெளி உள்ளதால், பல மாதமாக யானைகள் முகாமிட்டுள்ளன. இதனை பார்ப்பதுடன் சென்று விட வேண்டும். அருகில் செல்ல கூடாது. அவ்வாறு அருகில் சென்றால் வன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
