/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேலக்குன்னா பகுதியில் முகாமிடும் யானைகள்
/
சேலக்குன்னா பகுதியில் முகாமிடும் யானைகள்
ADDED : பிப் 17, 2024 02:02 AM
பந்தலுார்;பந்தலுார் சேலக்குன்னா பகுதியில் முகாமிடும் யானைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சேலக்குன்னா கிராமம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வாழவயல், தானிமூலா, பொன்னம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன.
இந்த கிராமங்களை அடுத்து வனப்பகுதி அமைந்துள்ளதால், இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. அதில் ஒரு மக்னா யானை, மற்றும் இரண்டு யானைகள் இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முகாமிட்டுள்ளது.
இங்குள்ள வாழை தோட்டங்கள் மற்றும் பாக்கு தோட்டங்களுக்கு வரும் யானைகள், விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக, இரவு தானிமூலா, பொன்னம்மாபள்ளம் கிராமங்களில் யானைகள் புகுந்ததால், வனக்குழுவினர் இங்கு முகாமிட்டு யானைகளை, விடியும் வரை வனப்பகுதிக்குள் துரத்தினர்.
பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களை ஒட்டிய புதர் பகுதியில் யானைகள் உள்ளதால், தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'இப்பகுதியில் பல யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானைகள் வருவது அறிந்தால், கண்காணிப்பு பணியில் உள்ள வன குழுவினரிடம் தெரிவிக்கலாம். வாகனத்தில் செல்பவர்களும் சாலையோரம் கவனிக்க வேண்டும்.
அதே போல, யானைகள் இரவில் குடியிருப்பை ஒட்டி வரும் போது, எக்காரணத்தை கொண்டும் கதவை திறக்க கூடாது; சப்தம் போடமல் இருக்க வேண்டும்,' என்றனர்.