ADDED : ஆக 07, 2026 07:18 AM

கூடலுார்: கூடலுார் நாடுகாணி அருகே, தேவாலா ஹட்டி சாலையோரம், பாண்டியார் டான்டீயை ஒட்டி 'ஹில்டாப்' மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி, கேரளா சுற்றுலா பயன்களும் அதிகளவில் வந்து சென்றனர்.
யானைகள் நடமாட்டம் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து, அறிவிப்பு பலகை வைத்து, கண்காணித்து வருகின்றனர்.
எனினும், வெளி மாநில சுற்றுலா பயணிகள் தேவாலா ஹட்டி சாலையில் பயணித்து, மலைப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை ரசித்து செல்கின்றனர்.
தற்போது, 'ஹில்டாப்' மலையில் ஐந்து காட்டு யானைகள் முகாமிட்டு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது. இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், யானைகள அருகே, சென்று இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வனத்துறையினர் கூறுகையில்,'அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம்; செல்பவர்கள் மீது வனசட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
