/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாழையை சேதமாக்கிய யானைகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை
/
வாழையை சேதமாக்கிய யானைகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை
வாழையை சேதமாக்கிய யானைகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை
வாழையை சேதமாக்கிய யானைகள்: மனமுடைந்த விவசாயி தற்கொலை
ADDED : அக் 30, 2025 12:03 AM
கூடலூர்: கூடலூர், தேவர்சோலை அருகே, காட்டு யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவத்தில், மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். கூடலூர், தேவர்சோலை 3 டிவிசன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 30. இவர் நேந்திரன் வாழை விவசாயம் செய்திருந்தார். சமீபத்தில், அவரின் வாழைத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானைகள், வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த அவர், 27ம் தேதி, விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
அப்பகுதியினர் அவரை மீட்டு, சிகிச்சிக்காக கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்று நேற்று, காலை பரிதாபமாக உயிரிழந்தார். தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

