/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பர்லியாரில் கொட்டப்படும் குப்பைகளால் பாதிப்பு; உணவு கழிவுடன் 'பிளாஸ்டிக்' உட்கொள்ளும் யானைகள்

ADDED : ஜூலை 04, 2025 09:37 PM

குன்னுார்; குன்னுார் பர்லியார் பகுதியில் யானை உட்பட வன விலங்குகள் பாதிப்படையும் வகையில், ஆற்றோர பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
குன்னுார் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட பர்லியார் பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலைபாதையில், அரசு பஸ்கள் உட்பட வாகனங்கள் பயணிகளின் அத்தியாவசிய தேவைக்காக, இங்கு நிறுத்தப்பட்டு செல்கிறது.
ஊராட்சி சார்பில், இங்கு குப்பை சேகரித்தல் உட்பட துாய்மை பணிகள் முழுமையாக மேற்கொள்வதில்லை. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பர்லியார் ஆற்றில் குப்பைகள் கொட்டுவதற்கு மாவட்டம் நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால், தற்போது குடியிருப்புகள் அருகே ஆற்றோரத்தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. அதில், பிளாஸ்டிக் உட்பட மட்கும் குப்பைகள் ஒன்றாக கொட்டப்படுகிறது. தெருவிளக்குகளும் இல்லாத நிலையில் இருள் சூழ்ந்த இந்த பகுதிக்கு இரவில் வரும் யானைகள் குப்பைகளை கிளறி உணவு கழிவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை உட்கொண்டு செல்கின்றன. இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இதே போல, மழை காலத்தில் இந்த குப்பைகள் அடித்து சென்று ஆற்றில் கலந்து விடுகிறது. சுகாதார சீர்கேட்டல், குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு நோய் ஏற்படுகிறது.
'குப்பைகள் கொட்ட வேண்டாம்,' என, வனத்துறையினர் இங்குள்ள கடைக்காரர்களிடம் வலியுறுத்தியும், அதே இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. எனவே,இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.