/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை காலில் காயம் ஏற்பட்ட சம்பவம்; தற்காலிக பாகன் பணி நீக்கம்
/
யானை காலில் காயம் ஏற்பட்ட சம்பவம்; தற்காலிக பாகன் பணி நீக்கம்
யானை காலில் காயம் ஏற்பட்ட சம்பவம்; தற்காலிக பாகன் பணி நீக்கம்
யானை காலில் காயம் ஏற்பட்ட சம்பவம்; தற்காலிக பாகன் பணி நீக்கம்
ADDED : ஆக 07, 2025 09:03 PM
கூடலுார்; முதுமலையில், வளர்ப்பு யானை சுமங்கலா காலில், கத்தியால் காயம் ஏற்படுத்தியது தொடர்பான புகாரில் தற்காலிக பாகன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில், தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வளர்ப்பு யானைகள் முகாம்களில், மூன்று குட்டிகள் உட்பட, 30 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். அபயாரண்யம் முகாமில் உள்ள வ ளர்ப்பு யானை சுமங்கலா, கடந்த, 3ம் தேதி அதிகாலை தி டீரென மற்றொரு வளர்ப்பு யானை 'சேரம்பாடி' சங்கரை தாக்கியது. பாகன்கள், ச ண்டையை தடுத்து யானைகளை கட்டி உள்ளனர்.
அதில், வளர்ப்பு யானை சுமங்கலாவின், பின் கால்களில் கூர்மையான ஆயுதத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது. காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். யானை நல்ல நிலையில் உள்ளது.
இது தொடர்பாக, வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வளர்ப்பு யானை சுமங்கலாவின் காலில் காயம் ஏற்படுத்திய தற்காலிக பாகன் விக்ரம் என தெரிய வந்ததால், அவரை வனத்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்தனர்.